
சேமித்த பணத்தை சரியான பங்குகளில் முதலீடு செய்யனுமா..? அப்போ இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
பொதுமக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் விழிப்புணர்வு சமீப காலமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. மேலும், பெரும்பாலான தனிநபர்கள் தங்கள் பணத்தை பல்வேறு ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து லாபம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் உங்கள் முதலீட்டிற்கேற்ற வலுவான வருமானம் வழங்கும் சில மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அதாவது, உங்கள் முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் 30% வரையான வருடாந்திர வருமானம் ஈட்ட முடியும். மேலும், “குவாண்ட் மிட் கேப் ஃபண்ட், மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட், எடெல்வைஸ் மிட் கேப் ஃபண்ட், எச்டிஎஃப்சி மிட்கேப் ஆபர்சுனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் நிப்பான் இந்தியா குரோத் நிதி” ஆகிய டாப் 5 ஃபண்டுகளில் ஏதேனும் ஒன்றில் மொத்தமாக முதலீடு செய்தால், அந்தப் பணம் 4 மடங்கு பெருக அதிக வாய்ப்புள்ளது. இந்த பங்குகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களின் வருடாந்திர வருமானம் 25 – 30% வரை அதிகரித்து ரூ. 3,63,890 ஆக உங்களுக்கு கிடைத்திருக்கும் என்றும், இதில் SIP வருமானம் மட்டும் 26-34 % ஆக உயர்ந்து இருக்கும் என நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

























