ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை மாற்றம்.. மீறினால் இத்தனை லட்சம் அபராதமா?? விவரம் உள்ளே!!

0
??????? ????????? ????? ???????? ???????.. ???????? ?????? ?????? ????????? ?????? ?????!!
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை மாற்றம்.. மீறினால் இத்தனை லட்சம் அபராதமா?? விவரம் உள்ளே!!

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை மாற்றம்.. மீறினால் இத்தனை லட்சம் அபராதமா?? விவரம் உள்ளே!!

சாமானிய மக்கள் தங்கள் சேமித்த பணம் அல்லது ஆவணங்களின் அதிகபட்ச பாதுகாப்பு கருதி அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். மேலும், டெபாசிட் செய்யப்பட்ட வைப்பு தொகை அல்லது ஆவணங்களுக்கான சில விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதலின் கீழ் சக வங்கிகள் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் RBI “பேமெண்ட்ஸ் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007” இன் கீழ் விதிமீறல்களுக்கான அபராதங்கள் மற்றும் விதிமுறைகளை சிலவற்றை மாற்றி அமைத்துள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் அரசு வேலை – முழு விவரங்களுடன்…!

அதாவது, “திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், அங்கீகாரம் இல்லாமல் கட்டண முறையை இயக்குதல், தேவையான தகவல்களை வழங்கத் தவறுதல், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது, KYC மற்றும் பண மோசடி தடுப்பு (AML) விதிமுறைகளை மீறுதல் போன்ற விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்”. மேலும், “தொடர்ந்து நடக்கும் விதிமீறல்களுக்கு, முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் ரூ.25,000/- வரை அபராதம் மட்டுமின்றி தனிப்பட்ட விசாரணைக்கும் அழைக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது”. இதை தொடர்ந்து, நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர நிதி நிலை அபராத அறிக்கை விவரங்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!