“மக்களே…! ‘இனி தட்கல் டிக்கெட் ஈஸியா புக் பண்ணலாம்’…!! இந்த ஒரு ஆப் போதும்”…!!
இந்தியாவில் மக்கள் சுலபமாக ரயில் பயணம் மேற்கொள்வதற்காக முன்கூட்டியே இணையத்தளத்தில் டிக்கெட்கள் பதிவு செய்யும் முறையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், அவசர காலங்களில் ரயில் பயணம் செய்வதற்கும் தட்கல் முன்பதிவு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. ஆனால், தற்போது இந்த தட்கல் டிக்கெட் பெறுவது பெரும் சவாலாக இருப்பதால் ரயில்வே நிர்வாகம் ‘SwaRail’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த செயலி அதிக செயல்திறனை கொண்டுள்ளதால் எவ்வித தடங்கலும் இல்லாமல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், PNR நிலை, ரயில் பயண அட்டவணை, ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது மற்றும் உணவு ஆர்டர் போன்ற அனைத்து தகவல்களையும் இந்த செயலியில் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


























