
” TANCET , CEETA நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு …!! “அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
தமிழகம் முழுவதும் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ ( M.B.A/M.C.A ) படிப்புகளுக்கான ‘TANCET ‘ நுழைவுத் தேர்வு மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் (M.E./ M.Tech./ M.Arch./ M.Plan) ஆகிய முதுகலை படிப்புகளுக்கான ‘CEETA’ நுழைவுத் தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இந்த நுழைவு தேர்வின் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருக்கும் சுமார் 15 ஆயிரம் இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 40,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது TANCET மற்றும் CEETA நுழைவு தேர்வுகளுக்கு www.tancet.annauniv.edu என்ற இணையதளம் மூலம் வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், எம்.சி.ஏ படிப்புக்கு 22.03.2025 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், எம்.பி.ஏ படிப்புக்கு 22.03.2025 அன்று மதியம் 2.30 மணி முதல் 04.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.























