தமிழகத்திற்கு நிவாரண நிதி விடுவிப்பு..!! ” எவ்வளவு கோடி தெரியுமா”..?
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக உருவெடுத்ததன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து, மழைநீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், “ஃபெஞ்சல்” புயலால் ஏற்பட்ட பேரழிவை சமாளிப்பதற்கு மாநில நிதி மட்டும் போதாது,தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிவாரண நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
























