இப்பகுதிகளில் இனி மின்சாரம் விநியோகம் நிறுத்தம்… மின்வாரியத்துறை அதிரடி அறிவிப்பு..
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மையம் நேற்று மாலை ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. மேலும், இன்று ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், அதன் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 துணைமின் நிலையங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியத்துறை அறிவித்துள்ளது.
இன்றிரவு கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்.. வானிலை ஆர்வலர் எச்சரிக்கை..
அதாவது, காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின்விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் பிறப்பகுதிகளில் வழக்கம் போல மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
























