ஜோசியம் பலிக்கும், 2026ல் அதிமுக ஆட்சிக்கு வரும்.. எடப்பாடி பழனிசாமி முக்கிய கருத்து!!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ‘நான் ஜோசியராகிவிட்டேன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொல்கிறார்’. ‘ஜோசியம் பலிக்கும், லஞ்சம் கொடுத்தால் தான் திமுக ஆட்சியில் வேலை நடக்கிறது’. ‘அடிப்படை கட்டமைப்பு உள்ள ஒரே கட்சி அதிமுக தான்’. ‘அதிமுகவில் இளைஞர்கள் அதிகம் சேர்க்கப்பட வேண்டும், வரும் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும்’ என்று கூறினார்.


























