சர்வதேச கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி.. வெளியான முக்கிய தகவல்!!
2026 ம் ஆண்டு T20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 23) குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 344 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய காம்பியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நடப்பு சாம்பியனை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்…, புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. T20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. மேலும் சர்வதேச T20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் ஜிம்பாப்வே அணி படைத்தது. இதற்கு முன்பு நேபால் அணி மங்கோலியாவுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது, சர்வதேச T20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிக ஸ்கோர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


























