
நீங்க SBI அக்கவுண்ட் வச்சுருக்கீங்களா…?? உங்க கணக்கில் இருந்து ரூ.295 டெபிட் ஆகுதா….அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்”..!!
அரசு மூலம் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் மற்றும் உதவி தொகைகள் வங்கி கணக்கு வாயிலாக மக்களுக்கு வழங்கப்படுவதால், வங்கி கணக்கை மக்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத நேரத்தில், சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.295 பற்று வைக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. ஏன் பணம் பற்று வைக்க படுகிறது? அது எப்படி என்பதை கீழே பார்க்கலாம் வாருங்கள்.
அதாவது, இப்போது நீங்கள் மாத தவணை(EMI) மூலம் ஏதேனும் பொருளை வாங்கி இருக்கிறீர்கள் என்றால், அந்த பொருளுக்கு EMI கட்ட வேண்டிய நாள் நெருங்கும் நேரத்தில், உங்களிடம் போதிய இருப்பு இல்லை என்னும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.250 அபராதத்துடன் ரூ.45 வரியை சேர்த்து மொத்தமாக ரூ.295 -யை உங்கள் கணக்கில் இருந்து “NACH” அமைப்பு வசூலிக்கிறது. NACH (NATIONAL AUTOMATED CLEARING HOUSE) எனப்படுவது EMI கட்டணங்களை செலுத்தும் விவரங்களை கண்காணித்து வரும் அமைப்பாகும்.























