தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 11,176 சிறப்பு பேருந்துகள்.. வெளியான முக்கிய தகவல்!!
நாடு முழுவதும் சிறப்பிக்கப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி முன்னிலை வகித்து வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் விடப்படுவதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்குவார்கள். இதற்காக பண்டிகை தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
























