தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையம் அலர்ட்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்!!
அதன்படி தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இன்று (அக்டோபர் 21) மிக கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.



























