உங்க பாஸ்போர்ட் தொலைஞ்சிருச்சா..?? கவலை வேண்டாம், இதை மட்டும் பண்ணுங்க ..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்தை பிரிந்து வேலைக்காக வெளிநாடு போக வேண்டிய நிலைமை அதிகம் ஏற்படுகிறது. மேலும், அத்தகைய இந்தியர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் போது அவர்களின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்று கீழே உள்ள பதிவில் விரிவாக பார்ப்போம்.
- உங்களின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் முதலில் நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக புகாரை பதிவு செய்ய வேண்டும். பிறகு, வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகவும். இவ்வாறு, இந்திய தூதரகத்தை அணுகுவதன் மூலம் புதிய பாஸ்போர்ட் மற்றும் அவசர சான்றிதழ் பெற இந்திய தூதரகம் உதவி செய்து, உங்களை இந்தியாவிற்கு அனுப்ப வழிவகை செய்யும்.
அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!!
- நீங்கள் புதிய பாஸ்போர்ட் பெற விரும்பினால், தற்போது இருக்கும் முகவரி சான்று, பிறந்த தேதிக்கான சான்று மற்றும் காவல்துறையில் புகார் தெரிவித்த ஆவணங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திக்கொண்டு பாஸ்போர்ட் பதிவு செய்ய வேண்டும்.
- மேலும், நீங்கள், விரைவில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்றால் அவசர சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நீங்கள் இந்தியாவிற்கு திரும்பிய உடன் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.



























