பாகிஸ்தானை விட இந்தியாவில் வறுமை அதிகம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
உலகில் மொத்தம் 110 கோடி பேர் கொடிய வறுமையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவை (UNO ) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் பாதி பேர் (48.1%) இந்தியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ (DRC) ஆகிய 5 நாடுகளில் உள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானை (9.3 கோடி) விட இந்தியாவில் தீவிர வறுமையில் இருப்போர் (23.4 கோடி) அதிகம். மனிதவளக் குறியீட்டில் பின்தங்கிய நாடுகளிலும், தீவிரவாதம் – போர் அதிகமுள்ள இடங்களிலும் வறுமை அதிகமாக உள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 40 கோடி மக்களும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 கோடி மக்களும் வறுமையில் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது


























