கனமழையால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருவதோடு வங்கக்கடல் பகுதிகளிலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே பல முக்கிய சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் காட்சி அளிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
கொட்டும் மழை.. களத்திற்ககே சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!!
அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (அக்டோபர் 16) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


























