வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வா..!! என்னங்க சொல்றீங்க..!! முழு விவரம் உள்ளே..!
கடந்த சில நாட்களாக சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அங்கு விற்கப்படும் காய்கறிகளின் விலை சற்று ஏற்ற தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு ராணுவ தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..|| “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 36 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பீட்ரூட் 31 ரூபாய், உருளைக்கிழங்கு 38 ரூபாய், அவரைக்காய் 45 ரூபாய், முட்டைக்கோஸ் 27 ரூபாய், கேரட் 51 ரூபாய், முருங்கைக்காய் 40 ரூபாய், கத்தரிக்காய் 37 ரூபாய் மற்றும் பீன்ஸ் 47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


























