தமிழகத்தில் இன்று (செப்.30) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் இன்று (செப்.30) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் இன்று (செப்டம்பர். 30) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாடு – ஒரே தேர்தல்.. 3 சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டம்!!

அதன் பின் வரும் அக்டோபர். 1 முதல் அக்டோபர். 6 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல செப். 30 முதல் அக்டோபர். 3 வரை, தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!