கிரிக்கெட் வரலாற்றில் இன்று.. CSK முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் T20 கோப்பையை வென்ற தினம்!!
14 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதிய இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வாரியர்ஸ் அணி 128 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 132 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IPL 2025: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்த போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் T20 கோப்பையை வென்றது. இதன் மூலம் ஒரே ஆண்டில் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் T20 ஆகிய இரண்டு கோப்பைகளை வென்ற முதல் அணியாக CSK வரலாற்றை உருவாக்கியது. தற்போது சென்னை அணி சிறந்து விளங்கிய இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.


























