ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு.. ரோஹித் சர்மா & விராட் கோலி முன்னேற்றம்!!
ICC அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமலே தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
2025 IPL தொடரில் தோனி விளையாடுவாரா?? இணையத்தில் வைரலாகும் CSK பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
அதாவது ரோஹித் சர்மா 751 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். மேலும் விராட் கோலி 737 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (899) முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (859) 2-வது இடத்திலும், தொடர்ந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (768 புள்ளிகள்) 3வது இடத்திலும் உள்ளார்கள். ரோஹித் சர்மா தற்போது 2 வடிவங்களின் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) டாப் 5 ஐசிசி தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் என்பது சிறப்பிற்குரியது.


























