16 முன்னணி நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்து||தமிழக அரசு அறிவிப்பு..!! எவ்வளவு கோடி தெரியுமா..??
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, சிகாகோவில் உள்ள பிரபல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து முதலீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் பல்வேறு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் தலைமையில் கையெழுத்தாகி உள்ளது. அந்த வகையில், இது வரை ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு மதிப்புகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கணுமா.? அப்போ இந்த செய்தியை உடனே படியுங்கள் ..!!
அதாவது, உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.7,016 கோடி முதலீடு மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



























