பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கணுமா.? அப்போ இந்த செய்தியை உடனே படியுங்கள் ..!!
பிறப்பு சான்றிதழ் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான அடையாள ஆவணமாக இருந்து வருகிறது. அதாவது, ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு , வாக்காளர் பட்டியல் , பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் அரசு பணிகள் போன்ற அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்தகைய பிறப்பு சான்றிதழில் சிலருக்கு பெயர் இல்லாமலே வழங்கப்பட்டிருக்கும். தற்போது அதில் பெயர் பதிவு செய்துகொள்ள ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அதை பற்றி கீழே விரிவாக காண்போம்.
பெயர் சேர்ப்பதற்கான ஆவணங்கள் மற்றும் முறைகள்:
அதாவது, 2017 ம் ஆண்டிற்குள் பிறந்த குழந்தையின் பெயர் மற்றும் விவரங்கள் உள்ள பிறப்பு சான்றிதழ்களை பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு சென்று குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி அடங்கிய பள்ளி சான்றிதழ் , பள்ளி மதிப்பெண் சான்று என்று ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம் என்று கோவை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.


























