பெண் காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! ” 3 ஆண்டுகள் சொந்த ஊரில் பணி”..!!
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். அதிலும், அரசு துறையில் பணியாற்றி வரும் பெண்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு சேவை செய்யும் பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதனை பற்றி கீழுள்ள பத்தியில் விரிவாக காண்போம்.
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் ..! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு;
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 2024-ம் ஆண்டிற்கான காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் முதலிய பதக்கங்கள் சிறந்த காவலர்களுக்கு வழங்கப்பட்டது. பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் . அதாவது, ” மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் அடுத்த 3 ஆண்டுகள் சொந்த ஊர்களில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் பெண் காவலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

























