NPC தேசிய உற்பத்தி கவுன்சிலில் ரூ.39,100/- சம்பளத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தேசிய உற்பத்தி கவுன்சிலில் (NPC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. Assistant Director பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | National Productivity Council (NPC) |
பணியின் பெயர் | Assistant Director |
பணியிடங்கள் | 17 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தேசிய உற்பத்தி கவுன்சில் பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Director பணிக்கு என 17 பணியிடங்கள் NPC நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Assistant Director கல்வி விவரம்:
- Assistant Director பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
- விண்ணப்பதாரர்கள் GATE 2023 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
NPC வயது விவரம்:
- இந்த NPC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 31.12.2023 அன்றைய நாளின் படி, 25 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
- SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Assistant Director சம்பளம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 10 படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
NPC தேர்வு செய்யும் முறை:
Assistant Director பணிக்கு தகுதியான நபர்கள் Group Discussion, Personal Interview, Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NPCI நிறுவனத்தில் 140+ காலியிடங்கள் – Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
Assistant Director விண்ணப்ப கட்டணம்:
- UR / EWS / OBC (NCL) – ரூ.300/-
- SC / ST / PwBD / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
NPC விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 31.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.