ITBP எல்லைக் காவல் படையில் Head Constable வேலை – ரூ.81,100/- சம்பளம் || 80+ காலிப்பணியிடங்கள்!
Head Constable (Midwife) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.81,100/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Indo-Tibetan Border Police Force (ITBP) |
பணியின் பெயர் | Head Constable (Midwife) |
பணியிடங்கள் | 81 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ITBP காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Head Constable (Midwife) பணிக்கென மொத்தம் 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Head Constable கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITBP வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Head Constable ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Axis Finance Limited நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!
ITBP தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST) மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.06.2023ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.