CMRL-ல் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
DGM / JGM / AGM, AM / DM / Manager பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. பணிக்கென காலியாக உள்ள 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000/- முதல் ரூ.1,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி DGM / JGM / AGM, AM / DM / Manager பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / 2 year MBA / B. E / B.Tech (Civil) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 என்றும் அதிகபட்ச வயதானது 47 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,50,000/- வரை பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதியானவர்கள் மருத்துவ தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் Deputation, Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.