UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – CDS தேர்வுக்கான E-Admit Card வெளியீடு..!
UPSC ஆணையத்தில் இருந்து Combined Defence Services Examination (I)-க்கான E-Admit Card ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
E-Admit Card:
UPSC ஆணையம் ஆனது Combined Defence Services Examination (I) குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் 341 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கான தேர்வானது வரும் 16.04.2023ம் தேதி நடைபெறவுள்ளது.
SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு! Register Now!
எனவே இத்தேர்வுக்கான E-Admit Card ஆனது UPSC-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் 24.03.2023ம் தேதி முதல் 16.04.2023ம் தேதி வரை http://upsc.gov.in என்னும் அதிகாரபூர்வ தளத்தில் சென்று Admit Card Download செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Admit Card இல்லாத தேர்வர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Download செய்யும் முறை:
- அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழையவும்.
- அதில் CDS 1 Admit Card 2023 என்பதை கிளிக் செய்யவும்.
- பின் கேட்கப்படும் Registration Id அல்லது Roll Number-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
- அதனை தொடர்ந்து Date Of Birth-ஐ உள்ளிட்டு Submit செய்யவும்.
- அதன் பின்னர் உங்கள் அட்மிட் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.