பாவ்னியை ப்ரொபோஸ் செய்த அமீர் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் அமீர்,பாவ்னி ஜோடி. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் சமீபத்தில் நிறைவடைந்த சீசன் 5ல் கவனம் ஈர்த்த ஜோடி தான் அமீர் – பாவனி ஜோடி.ஏற்கனவே கணவனை இழந்த பாவனி தனது சோக கதையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வைரல் ஆன ஜோடிகள் அமீர், பாவ்னி காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அந்த தகவலை இருவரும் மறுக்காத நிலையில் தற்போது பாவ்னி கடந்த சில நாட்களுக்கு முன்பு அமீருடனான காதலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் பாவனி ஜோடிகளின் காட்சிகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இவர்களின் நெருக்கத்தை கண்ட ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தியை வெளியிட்டனர். அதற்கேற்றவாறு இருவரும் ஒன்றாக அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும், விளம்பர படங்களில் நடிப்பதும் ரசிகர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. இதனிடையில் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் நடனத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
ரசிகர்கள் மத்தியில் இருவரும் காதலிப்பது உண்மைதானா, இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்று கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வருகின்றன. தற்போது இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அமீர் பிறந்த நாளை முன்னிட்டு பாவனி வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பாவணியிடம் லவ் ப்ரொபோசல் செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றன. அந்த விடியோவை வைரலாக்கிய ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.