சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு நீதித்துறை கீழ் செயல்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Member (Non – Judicial) பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனேவ இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | High Court of Judicature Madras |
பணியின் பெயர் | Member (Non – Judicial) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை உயர்நீதிமன்றம் காலிப்பணியிடங்கள்:
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Member (Non – Judicial) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் கல்வி தகுதி:
- Member (Non – Judicial) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Bachelor’s Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு பேச மற்றும் எழுத தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
சென்னை உயர்நீதிமன்றம் முன்னனுபவம்:
இந்த சென்னை உயர்நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Consumer affairs, Law, Public affairs, Administration, Economics, Commerce போன்ற பணிக்கு பிரிவுகளில் குறைந்தது 20 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
சென்னை உயர்நீதிமன்றம் வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் சம்பளம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி (Rule 4 of the Tamil Nadu Consumer Protection Rules 2021) மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு செய்யும் விதம்:
Member (Non – Judicial) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி, அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Best TNPSC Coaching Center – Join Now
சென்னை உயர்நீதிமன்றம் விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (31.07.2022) அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
The Registrar (Recruitment),
Judicial Recruitment Cell,
High Court of Madras,
Chennai – 600 104.