ஆதார் துறை காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது!!
மத்திய அரசின் ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UIDAI NISG |
பணியின் பெயர் | Assistant Director General & Assistant Director General (Technology) |
பணியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 28.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ஆதார் காலிப்பணியிடங்கள்:
UIDAI ஆணையத்தில் Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு என 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Assistant Director General – 15 காலியிடங்கள்
- Technology – 02 காலியிடங்கள்
வயது வரம்பு :
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
UIDAI கல்வித்தகுதி :
- மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் அதிகாரியாக பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
- மேலும் வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.
- அவற்றுடன் பணியில் 3 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
UIDAI தேர்வு செயல்முறை :
பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.