தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 90% மாணவர்கள் வருகை!!

1
தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 90% மாணவர்கள் வருகை!!

ஊரடங்கிற்கு பின்னர் நேற்று முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.  இந்நிலையில் 90 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்ததாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தொற்றின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும், பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டும் திறப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு பள்ளிகள் ஜனவரி 19ம் தேதி திறக்கப்பட்டது. மற்ற வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே கற்றலை தொடர்ந்தனர்.

தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

இதனை தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்தது. இதனால் நேற்று முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்ட்டது. அதிக இடைவெளி கழித்து மீண்டும் பள்ளிக்கு திரும்புவதால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். சென்னை, மதுரை, கோவை போன்ற முக்கிய மாவட்டங்களில் மாணவர் வருகை 90%க்கும் அதிகமாக இருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டனர்.

187 பள்ளி மாணவர்கள், 75 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – சுகாதாரக்குழு எச்சரிக்கை!!

கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், மாணவர்கள் அதிக நாட்கள் கழித்து பள்ளிக்கு வருவதால் முதல் இரண்டு நாட்கள் அவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் உளவியல் ஆலோசனை வழங்கப்படும். அதன்பின்னரே பாடங்கள் நடத்தப்படும். தற்போதைக்கு 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்படுகின்றன. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!