69,000 ஆசிரியர் காலியிட நியமனத்தில் முறைகேடுகள் – வலுக்கும் போராட்டம்!

0
69,000 ஆசிரியர் காலியிட நியமனத்தில் முறைகேடுகள் - வலுக்கும் போராட்டம்!
69,000 ஆசிரியர் காலியிட நியமனத்தில் முறைகேடுகள் - வலுக்கும் போராட்டம்!
69,000 ஆசிரியர் காலியிட நியமனத்தில் முறைகேடுகள் – வலுக்கும் போராட்டம்!

69,000 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான முறைகேடு குறித்து உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டங்கள் நீடித்து வருகிறது.

ஆசிரியர் பணி நியமனம்:

கடந்த 2018 டிசம்பர் 1ஆம் தேதி அன்று தேர்தலுக்கு முன்னதாக 69,000 ஆசிரியர்கள் பணி நியமனம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வுகள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. தேர்வில் பொதுப் பிரிவினருக்கு 65 சதவீதம், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அறுபது சதவீதம் என்று கட் ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. மே மாதம் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இட ஒதுக்கீடு அளவு கோள்களில் முரண்பாடுகள் காணப்பட்டது. இதன் காரணமாக தேவர்கள் அனைவரும தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க தொடங்கினார்கள்.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!

மொத்தமுள்ள 69 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களில் 20 ஆயிரம் பணியிடங்கள் முறைகேடான வழிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வர்கள் தொடர்ந்து இத்தனை வருடங்களாக போராட்டங்களை நடத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள ஹுசைங்கஞ்ச் கிராசிங்கில் நூற்றுக்கும் அதிகமான தேர்வர்கள் இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அரசின் நடவடிக்கை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!