ரேஷன் கார்டு இருந்தால் 5 லட்சம் வழங்கப்படும்..!! “முதல்வர் அறிவிப்பு”..!!!

1
ரேஷன் கார்டு இருந்தால் 5 லட்சம் வழங்கப்படும்..!! “முதல்வர் அறிவிப்பு”..!!!

இந்திய நாட்டில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் மருத்துவ காப்பீடும் ஒன்று. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், மக்கள் பலர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் “ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தைக் ” குறித்து , எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் பதிலினை கீழே விரிவாக காண்போம்..

மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் அரசு..! அன்புமணி கேள்வி..!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி தலைவர் சிவா அவர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பியதாவது ” புதுச்சேரியில் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், அக்காப்பீடு எந்த ஒரு மருத்துவமனைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை, புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனையிலும் ஏற்று கொள்வதில்லை. இதனால், ஏழை எளிய மக்கள் தங்களின் பொருளாதாரத்தை எண்ணி அவசர சிகிச்சை மேற்கொள்ளாமல் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்” என்றும் எப்போது ரேஷன் கார்டுகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல் படுத்தப்படும்? என்று கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ” சில மாநிலங்களில் மருத்துவ காப்பீடு அட்டையை தனியாக வைத்திருக்கின்றனர். அதேபோல், புதுச்சேரியிலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருடந்தோறும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது என்று அவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!