மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் அரசு..! அன்புமணி கேள்வி..!
தமிழக மக்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகின. ஆனால் தற்போது வரை அதற்கு உண்டான ஏற்பாடுகள் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வராமல் அரசு அலட்சியம் காட்டுகிறது.
தமிழகத்தில் இன்று (ஆக 13) முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!

நமது நாட்டின் முதியோர் உதவித்தொகை, கைம்பெண்கள் ஓய்வூதிய தொகை மற்றும் கணவரை இழந்த பெண்கள் என்று ஏராளமான மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காமல் காத்துகொண்டு இருக்கின்றனர். ஆகையால் அவர்களின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு தமிழக அரசு அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


























