தமிழகத்தில் இன்று (ஆக 13) முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!

0
தமிழகத்தில் இன்று (ஆக 13) முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இன்று (ஆக.13) காலை வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆகஸ்ட் 13) மற்றும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு!!

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மீனவர்கள் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கும், அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!