சிறந்த மேலாண்மை கல்விக்கான சர்வதேச பட்டியல் – 5 இந்திய கல்வி நிறுவனங்கள்!!

0
சிறந்த மேலாண்மை கல்விக்கான சர்வதேச பட்டியல் - 5 இந்திய கல்வி நிறுவனங்கள்!!
சிறந்த மேலாண்மை கல்விக்கான சர்வதேச பட்டியல் - 5 இந்திய கல்வி நிறுவனங்கள்!!
சிறந்த மேலாண்மை கல்விக்கான சர்வதேச பட்டியல் – 5 இந்திய கல்வி நிறுவனங்கள்!!

‘ஃபினான்ஸியல் டைம்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வில் சர்வதேச அளவில் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 5 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது என்று தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஆய்வு:

‘ஃபினான்ஸியல் டைம்ஸ்’ என்ற நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் நடப்பு ஆண்டிற்கான மேலாண்மை படிப்புக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு மேற்கொண்டு தயாரித்துள்ளது. எம்.பி.ஏ படிப்பை வழங்கும் 100 பல்கலை மற்றும் கல்லூரிகளின் சர்வதேச பட்டியலை தயாரித்துள்ளது. மேலும், ஆசிரியர்களின் பாலின விகிதம் மற்றும் சம்பளம், முன்னாள் மாணவர்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் அவர்களின் ஊதியம், தேர்ச்சி விகிதம் போன்ற 23 கருத்துக்ளைன் அடிப்படியில் ஆய்வை மேற்கொண்டுள்ளது.

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வயது வரம்பு தளர்வு – உச்சநீதிமன்றம் கேள்வி!!

இந்திய நிறுவனங்கள்:

இதில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்பி) 35-வது இடத்தையும், ஐஐஎம் கொல்கத்தா 44-வது இடத்தையும், ஐஐஎம் அகமதாபாத் 48-வது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், ஐஐஎம் இந்தூர் 94வது இடத்தை பிடித்து முதல்முறையாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு!!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனம் 8 இடமும், ஐஐஎம் கொல்கத்தா 2 இடமும் பின்நோக்கி சரிந்துள்ளது. ஆனால் ஐஐஎம் அகமதாபாத் 13 இடங்கள் முன்னேறியுள்ளது. ‘இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ நிறுவனம் சர்வதேச அளவில் 23 வது இடத்தை பிடித்துள்ளது. ‘ஃபினான்ஸியல் டைம்ஸ்’ நிறுவன ஆய்வின் படி நடப்பு ஆண்டிலும் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கான 100 இடங்களின் பட்டியலில் அமெரிக்க கல்வி நிறுவனங்களே அதிக இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!