நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 3000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
நேபாள நாட்டில் இன்று இரவு 7:52 மணிக்கு (IST) 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. NCS-ன் படி, நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அட்சரேகை 28.83 N மற்றும் தீர்க்கரேகை 82.06 E இல் பதிவானதாக NCS தெரிவித்துள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி தொடக்கம்….Result எப்போ?
நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏற்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 28ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதில், கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மியான்மர் நிலநடுக்கத்திற்கு பிறகு இப்போது நேபாளில் நில நடுக்க ஏற்பட்டிருக்கிறது.

























