ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ள தேர்வு ஒத்திவைப்பு – முழு விவரங்களுடன்!
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வானது கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கி வருகிற 15ம் தேதி வரை நடைபெறுகிறது. அதே போன்று 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கடும் வெயில் காரணமாக பொதுத்தேர்வு முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 3000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆழித் தேர் திருவிழா வருகிற 7ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி வழக்கம் போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 8ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























