12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி தொடக்கம்….Result எப்போ?

0

12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி தொடக்கம்….Result எப்போ?

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைந்தது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. தற்போது 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28 தொடங்கிய நிலையில் ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதலீட்டாளரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு இதோ!

தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!