சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு – 17 நாட்கள் போராடி சாதித்த அரசு!!!

0
சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு - 17 நாட்கள் போராடி சாதித்த அரசு!!!
சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு - 17 நாட்கள் போராடி சாதித்த அரசு!!!
சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு – 17 நாட்கள் போராடி சாதித்த அரசு!!!

உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் நேற்று 17 நாள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மீட்பு:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சார்தாம் யாத்திரை நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் 4.5 கிமீ தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த டிச.12ம் தேதி எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களுக்கு 6 அங்குல குழாய் மூலமாக உணவு மற்றும் மருந்துகளும் அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து, தொழிலாளர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் தொழிலாளர்களை நெருங்க முடியவில்லை. இந்நிலையில், எலி வளை சுரங்க நுட்பத்துடன் கைக்கருவிகளால் சுரங்கத்தை துளையிட்டு 17 நாட்களுக்கு பிறகு சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், சுரங்கத்தில் இருந்து வெளியேறிய அனைத்து தொழிலாளர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு போதிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 41 பேரையும் உயிருடன் மீட்டு கொடுத்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!