தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை?? ஆலோசனையில் தமிழக அரசு.. முழு விவரம் உள்ளே!!
தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி பண்டிகையை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தீபாவளிக்கு 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் ஜவுளி கடைகளிலும், பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை அன்று ஒரு தினம் மட்டுமே தான் அரசு விடுமுறை. ஆனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை , பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி விடுமுறை விடலாமா? என்று தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் நவம்பர் 9ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகலாம் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
























