தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு..!! குஷியில் அரசு ஊழியர்கள்…!!
சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்கள் தான் பெரும்பாலானோர் நினைவுக்கு முதலில் வருவது. இதற்கு ஏற்றாற்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. மேலும், மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் வருவார்கள் என்பதால் அம்மாவட்ட நிர்வாகமானது உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு.. எப்போது தொடங்குகிறது தெரியுமா..?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
அதாவது, தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள ஸ்ரீ கெளமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமர்சையாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் உச்ச நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை (மே 9) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனியில் உள்ள கண்ணகி கோவிலில் வரும் மே 12 ஆம் தேதி சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்பட இருப்பதால் அன்றும் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கு மாறாக மே 17 மற்றும் மே 31 வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் மே 9 வெள்ளிக்கிழமை, வழக்கம் போல சனி மற்றும் ஞாயிறு விடுமுறையோடு சேர்த்து மே 12 திங்கட்கிழமையும் என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு ஊழியர்கள் குஷியில் உள்ளனர்.


























