
+ 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு.. எப்போது தொடங்குகிறது தெரியுமா..?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (09-05-2025) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவாக முடிந்ததால் ஒரு நாள் முன்னதாகவே அதாவது இன்று (08-05-2025) வெளியிடப்பட்டது. இதை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை உள்ள அண்ணா நூலகத்தில் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர் “தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 7.5 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அரியலூர் மாவட்டம் 98.82 % தேர்ச்சியுடன் முதலிடம் வகிக்கிறது” என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்தார். மேலும், இத்தேர்விற்கு மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான அட்டவணை நாளை (09-05-2025) வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

























