இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையதள சேவை.. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்..!!
ஸ்டார்லிங்க் என்பது அமெரிக்க விண்வெளி உற்பத்தி மற்றும் விண்வெளிப் போக்குவரத்து நிறுவனமான Space X மூலம் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் இணைய சேவையாகும். இதை டெஸ்லா நிறுவனர், எலான் மஸ்க் 2002 ஆம் ஆண்டு நிறுவினார். மேலும், அமெரிக்கா முழுவதிற்கும் அதிவேக இணையதள வசதியை வழங்கக்கூடிய பிராட்பேண்ட் சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதை “இந்தியாவிற்கு கொண்டு வரும் நோக்கில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, எலான் மஸ்கின் ஸ்பேஸ் X நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன”.
மேலும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின்னர் ஸ்டார்லிங் பிளான்களை தங்களது சில்லறை அவுட்லெட்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் “எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் அதிவேக இணையதள சேவையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த இணைய சேவையை இந்திய சட்ட விதிகளின் படி செயல்பட, தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.



























