



India’s No. 1 Educational Portal Exams Daily யின் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் பல சிறப்பம்சங்கள் கொண்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர் போன்ற பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் குரூப் 4 தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது.
TNPSC தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்
இந்நிலையில் சமீபத்தில் TNPSC குருப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை தமிழக அரசு மாற்றி அமைத்ததோடு மட்டுமின்றி, TNPSC தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதும் கட்டாயம் என அறிவித்தது. இதனால், தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் இந்த தமிழ் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
எனவே உங்களுக்காகவே எங்கள் “Examsdaily” நிறுவனமானது, சிறந்த மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுந்த ஆசிரியர்களை கொண்டு எஸ்க்க்ளுசிவாக தமிழ் தகுதி தேர்வுக்கென நான்கு புத்தகங்களை உருவாக்கியுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 4 புத்தகங்கள்
- பொதுத்தமிழ் இலக்கணம் – பகுதி 1
- பொதுத்தமிழ் இலக்கணம் – பகுதி 2
- இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தொண்டும்
- பொதுத்தமிழ் 2500 முக்கிய வினாக்கள்(முந்தைய ஆண்டு வினாக்களின் படி தயாரிக்கப்பட்டது)
இந்த புத்தகங்களானது, பொதுத்தமிழின் இலக்கணம் பகுதிக்கென 2 புத்தங்கங்களும், இலக்கியம் பகுதிக்கென 1 புத்தகமும் மற்றும் 2500 மாதிரி வினாக்கள் கொண்ட ஒரு புத்தகமும் என 4 புத்தகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுத்தமிழ் இலக்கணம் பகுதி 1 புத்தகத்தில் இலக்கணம் மீதான புரிதலை அடிப்படையில் இருந்து உருவாக்கும் நோக்கத்தோடு, இலக்கணத்தின் அடிப்படையான எழுத்து, சொல், தொடர், பொருள், யாப்பு, அணி இலக்கணம், வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் மற்றும் மெய்ம்மயக்கம் போன்ற பகுதிகளை பற்றி விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
பொதுத்தமிழ் இலக்கணம் பகுதி 2 புத்தகத்தில், திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இலக்கண பகுதிகளான 7 அலகுகளையும் அதாவது எழுத்து, சொல், சொல்லகராதி , எழுதும் திறன், கலைச்சொற்கள் , வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் மற்றும் எளிய மொழிபெயர்ப்பு பற்றி வரிசையாகவும் தெளிவாகவும் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இத்தொகுப்பின் 3வது புத்தகமான இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தொண்டும் புத்தகமானது 8 வது அலகிற்கென பிரத்யோகமாக உருவாக்கப்பட்டதாகும். இதில் திருக்குறள் தொடர்பான செய்திகள் , அறநூல் தொடர்பான செய்திகள், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் மற்றும் தமிழ்சான்றோர் பற்றிய செய்திகள் போன்ற ஒவ்வொரு உட்பிரிவையும் இது விரிவாக விளக்குகிறது.
இதன் கடைசி புத்தகமாக, நீங்கள் இதுவரை படித்த பாடங்களை மதிப்பீடு செய்வதற்கும், முக்கிய வினாக்களை மாதிரி வினாத்தாள் வடிவில், சுமார் 2500 மேற்பட்ட முந்தைய ஆண்டு வினாக்களை தொகுத்து உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
இந்த TNPSC தமிழ் தகுதி தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கிய 4 புத்தகங்களை சலுகை விலையில் 1000 ரூபாய்க்கு “Examsdaily” நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் தகவல்கள் மற்றும் ஆர்டர் செய்ய 99 43 588 533 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


























