
கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யாவை கதிர் வீட்டிற்கு அழைத்து வர, அதை பார்த்த மூர்த்தி பயங்கர கோபப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் பிரிய கண்ணன் தான் எப்போதும் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்நிலையில் கண்ணன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறியும் மீண்டும் பிரச்சனையை கிளப்பி இருக்கின்றனர். அதாவது கண்ணன் வங்கியில் கடன் வாங்கி இருக்க, அதை கட்டாமல் விடுகிறார். உடனே வங்கியில் இருந்து ஊழியர்கள் பிரச்சனை செய்ய, கதிர் அவர்களை அடித்துவிடுகிறார்.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. மழைக்கும் வாய்ப்பு – வானிலை வெளியிட்ட அறிக்கை!
அதனால் கதிரை போலீஸ் பிடித்து சென்றனர். பின்னர், மூர்த்தி ஜீவா சேர்ந்து கதிரை கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வருகின்றனர். வெளியே வந்த கதிர் கண்ணன் ஐஸ்வர்யாவை தனியே இருக்க வேண்டாம் என சொல்லி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதற்கு மூர்த்தி என்ன சொல்வார் என தனம் பயத்தில் இருக்க, மூர்த்தி கண்ணனை பார்த்து, கதிர் ஜெயிலுக்கு போக இவன் தான் காரணம் இனிமேல் இவனுக்கு இந்த வீட்டில் இடம் இல்லை என பேசுகிறார்.