பணிப்பெண் வேலைக்கு 2 கோடி சம்பளம் – இந்த தகுதிகள் இருந்தால் மட்டும் போதும்!

0
பணிப்பெண் வேலைக்கு 2 கோடி சம்பளம் - இந்த தகுதிகள் இருந்தால் மட்டும் போதும்!
பணிப்பெண் வேலைக்கு 2 கோடி சம்பளம் - இந்த தகுதிகள் இருந்தால் மட்டும் போதும்!
பணிப்பெண் வேலைக்கு 2 கோடி சம்பளம் – இந்த தகுதிகள் இருந்தால் மட்டும் போதும்!

பணிப்பெண் வேலைக்கு இரண்டு கோடி சம்பளம் வழங்க இருப்பதாக சீன நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் விளம்பரம் அளித்துள்ள நிலையில் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதையும் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

பணிப்பெண் வேலை:

சீன நாட்டில் உள்ள ஹாங்காய் நகரத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டில் பணிபுரிய பணிப்பெண் தேவை என செய்திதாளில் விளம்பரம் செய்திருக்கிறார். அதிலும் அந்த பெண்மணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 15 லட்சம் வீதம் ஒரு வருடத்திற்கு மட்டுமே இரண்டு கோடி சம்பளம் வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், பணிப் பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கான பல்வேறு தகுதிகளையும் செய்தித்தாளில் வெளியிட்டிருக்கிறார். அதாவது தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணி 165 சென்டிமீட்டர் உயரம், 55 கிலோவிற்கு குறைவான எடை மற்றும் 12-ம் வகுப்பிற்கு மேல் படித்தவராக இருக்க வேண்டும் எனவும், நேர்த்தியான தோற்றம், சுத்தமான உடை மற்றும் ஆட, பாட தெரிந்திருக்க வேண்டும் எனவும் விளம்பரம் செய்திருக்கிறார்.

ஆவின் பால் வாங்குவோர் கவனத்திற்கு.. இனி இந்த மாற்றம் வர போகுது – அமைச்சர் முக்கிய தகவல்!

மேலும், இந்த பெண்மணியின் வீட்டில் ஏற்கனவே வருட சம்பளமாக ரூபாய் 2 கோடி அளவில் 2 பெண்மணிகள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனாலும், மீண்டும் ஒரு பெண்மணியை வேலைக்கு எடுக்க விரும்புகிறார். இது குறித்து இந்த பெண்மணியின் வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண், எஜமானின் காலில் இருக்கும் காலணிகளை கழற்றுவது, எஜமானி வீட்டிற்கு வரும்போது வாசலில் காத்துக் கொண்டிருப்பது, ஜூஸ், பழம், தண்ணீர் என எப்போது கேட்டாலும் சில நிமிடங்களிலேயே கொடுக்க வேண்டும், கையசைவு செய்த உடனையே அவரின் உடைகளை மாற்ற வேண்டும் இது போன்ற வேலைகளை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!