தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. செப்டம்பர் 1 முதல் அமல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் கார், வேன், பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சுங்க கட்டணம் திடீரென அதிகரித்ததை நாம் அறிவோம். தற்போது சுங்க கட்டணம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 5% சதவீதம் முதல் 7% சதவீதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
























