
நீங்க ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் வரை சம்பாதிக்கிறீங்களா ..? ” உங்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய நிதி அமைச்சர்”.. உடனே என்னனு தெரிஞ்சுக்கோங்க”..!!
2024ம் ஆண்டு நிறைவடைந்து, 2025 புத்தாண்டு வர இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் சிறிய சிறிய மாற்றங்களை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளது. மேலும், புத்தாண்டு தொடங்கும் போது மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரி விகிதம் அதிகரிப்பது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், 2025 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளதாகவும்,அப்போது சில வரி மாற்றங்களை நிதி அமைச்சர் அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஆண்டு வருமானமாக ரூ. 15 லட்சம் வரை சம்பாதிக்கும் மக்கள் அரசுக்கு செலுத்தும் வரி விகிதத்தை சற்று குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். மேலும் இது 2025ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில், நகர் புறங்களில் அதிக வாழ்க்கை செலவினங்களை எதிர்கொண்டு வாழும் லட்சக்கணக்கான நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.























