தமிழகத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய மின்திட்டம் – மின் வாரியம் அறிவிப்பு!!
புதிய மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி பெற உள்ளதாக தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய திட்டம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற நாள் முதல் அனைத்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. அதிலும் மின்சார துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்துள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் மின் புகார் மையம் அமைக்கப்பட்டு மின் சார்ந்த குறைகள் 2 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு வருகிறது.
ஓமைக்ரான் பரவல் காரணமாக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு – அச்சத்தில் பொதுமக்கள்!!
அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீராக மின் வினியோகம் செய்யும் நோக்கில் மத்திய அரசு 3.03 லட்சம் கோடி செலவில் இரு பிரிவுகளை கொண்ட புதிய மின் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி பெற உள்ளதாக தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதிரால் கொடூரமாக தாக்கப்படும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்தகட்ட கதைக்களம்!
மத்திய அரசு இந்த திட்டத்தை 0226 ஆம் ஆண்டுக்குள் முடித்து கொடுக்க கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகளை முடிப்பதற்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு 60 சதவீதம் மானியமாக கிடைக்கும். அதனால் மத்திய அரசிடம் தமிழக அரசு 20 ஆயிரம் கோடி கேட்க உள்ளது.இதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், செலவு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை இம்மாதத்துக்குள் தமிழக மின் வாரியம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.