இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா – 1038 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டி வருகிறது. அதன்படி நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 2 லட்சத்தை எட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவலால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை லட்சங்களை கடந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒவ்வொரு நாள் பாதிப்பு 6 ஆயிரங்களை தாண்டி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,00,739 ஆக உள்ளது. அதே போல ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,00,739 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,564 ஆக உள்ளது.
அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வு முறை – மாணவர்கள் கோரிக்கை!!
நேற்று மட்டும் 1038 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதனால் மொத்த இறப்பு வீதம் 1,73,123 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து 93,528 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 14,71,877 பேர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர், தவிர இதுவரை 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.