2024 ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.. 16 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மகிழ்ச்சியில் பயணிகள்!!

0
2024 ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.. 16 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மகிழ்ச்சியில் பயணிகள்!!

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். ஓணத் திருநாள் மொத்தம் பத்து நாட்கள் களைகட்டும். இந்த பண்டிகை நாட்களை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் உப்பள்ளி – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இலவசமாக 5 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு||மத்திய அமைச்சரவை அறிவிப்பு..!!

அதாவது கர்நாடகா மாநிலம் எஸ்.எஸ்.எஸ். ஹூப்ளி – கேரளா மாநிலம் கொச்சுவேலி இடையே ஒருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரயில் நாளை (செப்டம்பர் 13) இயக்கப்பட உள்ளது. அதன்படி, நாளை (வெள்ளி) காலை 6.55 மணிக்கு உப்பள்ளியில் இருந்து ஹூப்ளி-கொச்சுவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 07333) புறப்படும். கொச்சுவேலியை மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 14ம் தேதி அன்று மதியம் 12.50 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து கொச்சுவேலி – எஸ்.எஸ்.எஸ். ஹூப்ளி சிறப்பு ரயில் (வண்டி எண் 07334) புறப்படும். இந்த சிறப்பு ரயில் ஹூப்ளியை மறுநாள் மதியம் 12.50 மணிக்கு வந்தடையும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!